உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில் 

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவி அஸ்வின் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். 
உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில் 
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

21 மாதங்களுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிரான தொடரில் களமிறங்கி பௌலிங்கில் அசத்தினார் அஸ்வின். மேலும் பேட்டிங் கிடைக்காவிட்டாலும் போட்டி முடிந்தப்பிறகு நடு இரவிலும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் சர்மா, “அஸ்வினின் அனுபவத்தினையும் அவரது ஸ்டைலினையும் நாம் புறக்கணிக்கவே முடியாது. ஆஸி. தொடரில் சிறப்பாக பந்து வீசினார்.  நன்றாக வேறுபடுத்தும் விதமாக பந்து வீசினார். மாற்று வீரராக அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும்” எனக் கூறினார். 

அக்.5ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க இருக்கிறது. செப்.28 வீரர்களுக்கான மாற்று அறிவிப்பினை அனைத்து அணிகளும் இறுதி செய்யும் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com