ஆஸி.க்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆஸி.க்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக  கைப்பற்றுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிதே கிடையாது. இந்த இரு அணிகள் சொந்த மண்ணில் விளையாடியபோதும், சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோதும் ஒருநாள் தொடரை முழுமையாக வென்றதே கிடையாது. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதனால், மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்குத் திரும்பியுள்ளனர். 

நாளை நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com