அதிகமாக சம்பாதிப்பதால் இந்திய வீரர்களுக்கு ஆணவமா?: கபில் தேவ் கருத்துக்கு ஜடேஜா பதிலடி! 

அதிகமாக சம்பாதிப்பதால் இந்திய அணிக்கு ஆணவமா என்ற கேள்விக்கு  பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். 
அதிகமாக சம்பாதிப்பதால் இந்திய வீரர்களுக்கு ஆணவமா?: கபில் தேவ் கருத்துக்கு ஜடேஜா பதிலடி! 
Updated on
1 min read

இந்திய அணி சமீபகாலமாக எந்தவிதமான ஐசிசி கோப்பைகளையும் வெல்லாமல் இருக்கிறது. இறுதியாக தோனி தலைமையில் வென்ற்து குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வினை தேர்வு செய்யாதது குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார். 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், “ சச்சின், விவிஎஸ் லக்‌ஷ்மணன், திராவிட் எல்லாம் சுனில் கவாஸ்கரிடம் பேட்டிங் குறித்து சந்தேகம் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்டு விளையாடுவார்கள். ஆனால் தற்போதைய வீரர்கள் யாரும் சுனில் கவாஸ்கரிடம் செல்லாதது வருத்தமளிக்கிறது. அதிகமாக சம்பாதிப்பதால் இந்திய அணி வீரர்களுக்கு ஆணவம் வந்துவிட்டது” எனக் கூறியிருந்தார் . 

இதற்கு இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜடேஜா, “அவர் எபோது இதுபோல கூறினனத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் அதிகமாக எதையும் தேடுவதில்லை. மூத்த வீரராக கபில் தேவ் அவர்களுக்கு கருத்து கூற உரிமையுண்டு. ஆனால் நாங்கள் அப்படியில்லை. கடினமாக உழைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். யாரும் எதையும் சலுகையாக நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்திய அணி வெற்றிப்பெற நூறு சதவிகித உழைப்பினை கொடுக்கிறோம்” எனக் கூறினார். 

இதனால் ஜடேஜா சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com