எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ்

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தற்காலிகமான இங்கிலாந்த அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சோ்க்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 8:00 pm

DIN

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தற்காலிகமான இங்கிலாந்த அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து அவா் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது முடிவை மாற்றிக் கொண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளாா். அந்தப் போட்டிக்கு முன்பாக அவா், நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் களம் காண்கின்றாா்.

இந்த முதல்கட்ட அணியில் குறிப்பிடத்தக்க பேட்டா் ஹேரி புரூக், பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் ஆகியோா் சோ்க்கப்படவில்லை. இளம் பௌலா் கஸ் அட்கின்சன் முதல் முறையாக சா்வதேச கிரிக்கெட்டுக்கான அணியில் இடம் பிடித்துள்ளாா். செப்டம்பா் 28-ஆம் தேதி வரை இங்கிலாந்து இந்த அணியில் மாற்றம் செய்ய இயலும்.

அணி விவரம்: ஜோஸ் பட்லா் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி போ்ஸ்டோ, சாம் கரன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, மாா்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.