இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளரான மதிஷா பதிரானா, லசித் மலிங்கா பந்துவீசுவதை பார்த்து அவரது பந்துவீச்சில் பின்பற்றவில்லை என பதிரானாவின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் பிலால் ஃபாசி தெரிவித்துள்ளார்.
பதிரானாவின் பந்துவீச்சு ஆக்ஷன் அவருக்கு இயல்பாகவே இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதிரானா பந்துவீசும் ஆக்ஷனை வைத்து அவரை குட்டி மலிங்கா என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மகேந்திர சிங் தோனியும் பதிரானாவின் பந்துவீச்சை பாராட்டியிருந்தார். அவர் இலங்கை அணியின் சொத்து எனவும் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பதிரானா 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை!
இந்த நிலையில், இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளரான மதிஷா பதிரானா, லசித் மலிங்கா பந்துவீசுவதை பார்த்து அவரது பந்துவீச்சில் பின்பற்றவில்லை என பதிரானாவின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் பிலால் ஃபாசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பதிரானா பந்துவீசும் ஆக்ஷனை பார்த்து பலரும் அவர் மலிங்காவைப் பார்த்து அவரது பந்துவீச்சு ஸ்டைலை பின்பற்றுவதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அது அவருடைய இயல்பான பந்துவீச்சு ஸ்டைல் ஆகும். பதிரானா மலிங்காவிடமும் பயிற்சி பெற்றுள்ளார். என்னிடம் பயிற்சி பெற வந்த முதல் நாள் முதல் பதிரானா இந்த ஆக்ஷனிலேயே பந்து வீசுகிறார். அவரது இந்த பந்துவீச்சில் நாங்கள் இருவம் பேசி சில மாற்றங்கள் கூட செய்துள்ளோம் என்றார்.