மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இந்த வெற்றிக்கு காரணம் தோனி: மே.இ.தீவுகள் அணி வீரர் புகழாரம்!  

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது. 

Published On :

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது. 

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்களும் ஜாக் க்ராவ்லி 48 ரன்களும் சால்ட் 45 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 

தொடக்க வீரர் அலிக் அதான்ஜா 66 ரன்களும் ரொமாரியோ ஷெபார்ட் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். 

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹோப், “வெற்றிக்காக விளையாடினேன். சதம் என்பது கூடுதல் போனஸ். நாங்கள் வெற்றியடைந்ததுக்கு மகிழ்ச்சி. சில நாள்களுக்கு முன்பாக நான் தோனியிடம் பேசியிருக்கிறேன். அபோது அவர் களத்தில் அதிகம் நேரம் இருக்க வேண்டும் எனக் கூறியது எனது நினைவுக்கு வந்தது. இதே மாதிரி தொடரினை முடிக்க வேண்டும். உலகத்தில் சிறந்த அணியாக மாற வேண்டுமானால் சிறந்த அணி போல் விளையாட வேண்டும்” எனக் கூறினார். 

Story image

ஒருநாள் உலகக் கோப்பைக்கு தேர்வாகாத மே.இ.தீ. அணி மீண்டும் சிறப்பாக விளையாட துவங்கியுள்ளது. 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.