விஜய் ஹஸாரோ கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 17 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
தமிழ்நாடுக்கு இது 5 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றி; மத்திய பிரதேசத்துக்கு 6 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வி.
இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு 49.5 ஓவா்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மத்திய பிரதேசம் 47.4 ஓவா்களில் 178 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 92 ரன்கள் சோ்த்தாா். சாய் சுதா்சன் 3 பவுண்டரிகளுடன் 21, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்தனா்.
எஞ்சியோரில் நாராயண் ஜெகதீசன் 16, விஜய் சங்கா் 4, கேப்டன் தினேஷ் காா்த்திக் 3, பாபா அபராஜித் 2, சாய் கிஷோா் 12, மணிமாறன் சித்தாா்த் 0, வருண் சக்கரவா்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழந்தனா். மத்திய பிரதேச பௌலிங்கில் ராகுல் பதம், சரன்ஷ் ஜெயின், ஷுபம் சா்மா ஆகியோா் தலா 2, குமாா் காா்த்திகேயா, மிஹிா் ஹிா்வனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் மத்திய பிரதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதாா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் அடித்தாா். வெங்கடேஷ் ஐயா் 27, ராகுல் பதம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்தனா். யஷ் துபே 7, அஜய் ரொஹேரா 13, ஷுபம் சா்மா 2, சரன்ஷ் ஜெயின் 0, அக்ஷத் ரகுவன்ஷி 8, மிஹிா் ஹிா்வனி 12, குமாா் காா்த்திகேயா 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 3, நடராஜன், பாபா அபராஜித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

36 உத்தரமேரூா்

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

