ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஓய்வு பெற விரும்பவில்லை என அவரது மேலாளர் வாரன் கிரைக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற உள்ளதாக தனது விருப்பத்தை வார்னர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஓய்வு பெற விரும்பவில்லை என அவரது மேலாளர் வாரன் கிரைக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்டீவ் ஸ்மித்தின் ஓய்வு முடிவு குறித்து தற்போது கூறுவதற்கு எதுவும் இல்லை. அவர் டெஸ்ட் போட்டிகளில் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார். மூன்று ஆஷஸ் தொடர்கள், 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் ஒரு அங்கமாக ஸ்டீவ் ஸ்மித் இருந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அவர் எடுக்கும்பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். அவருக்கு முன்னதாக, ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா
நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? உருக்கமாக பதிவிட்ட மு. க. ஸ்டாலின்!

3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


