இரண்டாவது டெஸ்ட்டில் முகமது ஷமிக்கு மாற்று வீரர் இவர்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட்டில் முகமது ஷமிக்கு மாற்று வீரர் இவர்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: காயம் காரணமாக இந்திய அணியில் முகமது ஷமிக்குப் பதிலாக ஆவேஷ் கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப் டவுனில் ஷமிக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 38 போட்டிகளில் விளையாடியுள்ள ஆவேஷ் கான் 149 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com