டெஸ்ட் தொடர்: சிட்னியில் தனித்து விடப்பட்ட பிரபல ஆஸி. பேட்டர்!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர்: சிட்னியில் தனித்து விடப்பட்ட பிரபல ஆஸி. பேட்டர்!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.

முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் கர்நாடகத்தில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அலூர் நகரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் ஆஸி. வீரர்கள் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளார்கள். சிட்னியிலிருந்து கிளம்பிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேராக பெங்களூருவுக்கு வந்துள்ளார்கள். பெங்களூரில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கான ஏற்பாடுகளை நேஷனல் கிரிக்கெட் அகாதெமி கவனித்துக் கொள்கிறது. 

இந்நிலையில் பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா மட்டும் நுழைவு இசைவு (விசா) கிடைக்காத காரணத்தால் இந்தியாவுக்கு உடனடியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தாலும் கவாஜாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரில்லாமல் ஆஸி. அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. எனினும் கவாஜாவுக்கு விரைவில் விசா கிடைப்பதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்து வருகிறது. இதனால் சிட்னியில் தனிமையில் உள்ளார் கவாஜா. இதுகுறித்து இன்ஸ்டகிராம் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ளார். இந்தியாவில் இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லையென்றாலும் 2013, 2017 ஆண்டுகளில் ஆஸி. அணியினருடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். வரும் வியாழன் அன்று கவாஜா பெங்களூருக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com