ஒருபோதும் கைவிட வேண்டாம்: இடக்கை பேட்டிங் பற்றி விஹாரி!

அணியின் நலனுக்காக இடக்கையால் பேட்டிங் செய்த பிரபல வீரர் விஹாரி, தனக்குப் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும்...
ஒருபோதும் கைவிட வேண்டாம்: இடக்கை பேட்டிங் பற்றி விஹாரி!
Published on
Updated on
1 min read

அணியின் நலனுக்காக இடக்கையால் பேட்டிங் செய்த பிரபல வீரர் விஹாரி, தனக்குப் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. ரிக்கி புய் 149 ரன்களும் கரண் ஷிண்டே 110 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் விஹாரி 27 ரன்கள் எடுத்தார்.

முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார். 

முதல் நாளன்று 16 ரன்களில் காயமடைந்து ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. ஸ்கேன் செய்து பார்த்ததில் இடக்கை மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதனால் 5, 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தேவைப்பட்டால் விஹாரி விளையாடட்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்தது. 

ஆனால் முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். தைரியமாக அவேஷ் கானின் ஓவரை மீண்டும் எதிர்கொண்டார். சில பவுண்டரிகளும் அடித்துக் கடைசியில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் விஹாரின் துணிச்சலான நடவடிக்கையால் 379 ரன்கள் எடுத்தது.

விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள். இந்நிலையில் ட்விட்டரில் விஹாரி கூறியதாவது:

அணிக்காகச் செய்யுங்கள். அணி வீரர்களுக்காகச் செய்யுங்கள். ஒருபோதும் கைவிட வேண்டாம். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. இதை மிகவும் மதிக்கிறேன் என்று கூறி இடக்கையால் பேட்டிங் செய்த இன்னிங்ஸின் விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com