ஆசியக் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது -பிசிசிஐ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது -பிசிசிஐ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பஹ்ரைனில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்திற்கு பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா சென்றுள்ளார்.

ஆசியக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை தீர்மானிப்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேதி அழைத்ததன் பேரில் ஜெய் ஷா கலந்துகொண்டார். 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பொதுவான திடலில் நடத்த வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அதற்கான விவாகரத்தில் கலந்தாலோசிக்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பஹ்ரைனுக்கு சென்றுள்ளார்.

எனினும் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையை நடத்துவது இல்லை என்று பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com