‘எனது தலைமைப் பண்பில் தோனிக்கு மிகப்பெரிய பங்குள்ளது’- இந்திய மகளிர் அணி கேப்டன்! 

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமைப் பண்பு குறித்து பேசியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கும், ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

ஆடவா் கிரிக்கெட் போட்டிகளைப் போல் மகளிா் கிரிக்கெட்டும் தற்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. 14 ஆண்டுகளாக மகளிா் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. 

நிகழாண்டு உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கையும், குரூப் 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், மே.இந்திய தீவுகள் இடம் பெற்றுள்ளன. நியூலேண்ட்ஸ் கேப் டவுன், பாா்ல் போலண்ட் பாா்க், ஜெபா்ஹா செயின்ட் ஜாா்ஜ் பாா்க் மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: 

ஆடுகளத்தில் தோனி எவ்வளவு புத்திசாலி என அனைவருக்கும் தெரியும்.  இப்போதும்கூட தோனியின் பழைய விடியோக்களை பார்க்கும்போது கற்றுக்கொள்ள  நிறைய உள்ளது. கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சிறிய விஷயங்களின் மீது கவனம் செலுத்துகிறேன். அது அணிக்கு களத்தில் மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். தலைமைப் பண்பு என்று சொல்லும்போது கங்குலி, தோனியின் பாதிப்பு என்னுடைய வாழ்க்கையில் உள்ளது. 

அவர்கள் அணியை வழிநடத்தியது போல எனக்கும் நடந்த வழிநடந்த ஆசை. கங்குலி இந்திய அணியை வழிநடத்தும்போது ஆடவர் அணி வளர்ச்சியடைந்தது. டிரெஸ்ஸிங் ரூமில் அவர் நடந்துக்கொண்ட விதமும் அவர் வீரர்களை நம்பிய விதமும் மிகவும் பிடிந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com