35 வயது ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட், ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் இருந்தவர்.
2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது.
இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்! (விடியோ)
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார். 142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது:
என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம்.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரை விட மிகப்பெரியது இந்தியாவை வெல்வது: ஸ்டீவ் ஸ்மித்
கேப்டனாக இருக்கும்போது 2021ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன்.