நெ. 1 டெஸ்ட் அணியாக இந்திய அணி முன்னேறிய தகவல், தொழில்நுட்பத்தின் தவறால் உண்டானது என ஐசிசி கூறியுள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது.
நேற்று வெளியிடப்பட்ட அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் நெ.1 அணியாக இந்திய அணி இருந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்தத் தகவலை மிகவும் கொண்டாடினார்கள். ஆனால் அவர்களுடைய சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. தொழில்நுட்பத்தின் தவறால் இந்திய அணி முதலிடம் வகித்ததாக ஐசிசி விளக்கம் அளித்தது.
பிப்ரவரி 15 அன்று குறுகிய நேரம் ஐசிசி தரவரிசையில் தொழில்நுட்பத் தவறு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம். அதனால் இந்திய அணி தவறுதலாக நெ.1 டெஸ்ட் அணியாக இருந்தது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என்று ஐசிசி கூறியுள்ளது.
தவறு சரி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலிய அணி நெ.1 இடத்துக்கு மீண்டும் வந்தது. இந்திய அணி 2-ம் இடத்துக்குத் திரும்பியது. தரவரிசையில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளும் இந்தியா 115 புள்ளிகளும் கொண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு: கேஜரிவால் குற்றச்சாட்டு

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

திருவாரூருக்கு ஆக.17 இல் குடியரசுத் துணைத் தலைவா் வருகை

குறை கூறுவது மட்டுமே அரசியலல்ல! - கே. அண்ணாமலை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



