ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.
ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்றார். கடந்த மார்ச் 2021-ல் நெ.1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச். தற்போது, ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2011-ல் 24 வயதில் முதல்முறையாக நெ.1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நெ.1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.
தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடம்
1. ஜோகோவிச் - 378 வாரங்கள்
2. கிராஃப் - 377 வாரங்கள்
3. நவரத்திலோவா - 332 வாரங்கள்
4. செரீனா வில்லியம்ஸ் - 319 வாரங்கள்
5. ஃபெடரர் - 310 வாரங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.