திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

2-வது டெஸ்டில் ஆட்டமிழந்த விதம்: கோபமடைந்த ஸ்டீவ் ஸ்மித்!

2-வது டெஸ்டில் ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்.

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 9:11 am

DIN

2-வது டெஸ்டில் ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

தில்லி டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த ஆஸ்திரேலியா, 3-வது நாளன்று முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா. பின்னர் 114 ரன்களை நோக்கி பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா ஆட்ட நாயகன் ஆனார். 

இந்தூரில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்டில் கம்மின்ஸுக்குப் பதிலாக ஆஸி. அணிக்குத் தலைமை தாங்குகிறார் ஸ்டீவ் ஸ்மித். இந்நிலையில் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ஆட்டமிழந்தார் ஸ்மித். அதுபற்றி அவர் கூறியதாவது:

நான் 95 டெஸ்டுகளில் (94) விளையாடியிருப்பேனா? ஆட்டமிழந்து வெளியேறும்போது, என்ன நான் செய்துள்ளேன், ஏன் இப்படி ஆட்டமிழந்தேன் என எப்போதாவது தான் நினைத்துள்ளேன். அன்றைய தினம் ஆட்டமிழந்த பிறகு நான் கோபமாக இருந்தேன். எனக்கான சிறந்த நேரமல்ல அது. அதிலிருந்து நான் கற்றுக்கொள்ள இருக்கிறது. நான் இன்னமும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். நான் விளையாட நினைத்த ஷாட் அல்ல அது. அன்றைய தினம் நாங்கள் அவசரப்பட்டு விட்டோம். நாங்கள் நிதானமாகச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். ஆபத்தை வரவழைக்கும் விதத்தில் விளையாடக் கூடாது. 

ஆஸி. அணிக்கு கேப்டனாக இருக்கும்போது என்னுடைய திறமை முழுமையாக வெளிப்படும். இந்தியாவில் நிலவும் சூழலை நான் நன்கு அறிவேன். இது எனக்கு 2-வது சொந்த ஊர் போல. இந்தியாவில் நிறைய விளையாடியுள்ளேன். இந்த டெஸ்டை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.