இந்தியா ஒருநாள் தொடர்: பிரபல நியூசிலாந்து வீரர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் விலகியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தானில் ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் தற்போது விலகியுள்ளார். இந்தியாவிலும் பாகிஸ்தானும் 16 நாள்களில் 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பதால் அதற்குச் சரியான முறையில் தயாராகவில்லை எனக் கூறி இரு ஒருநாள் தொடர்களில் இருந்தும் மில்ன் விலகியுள்ளார். இதையடுத்து நியூசிலாந்து அணியில் பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி

டாம் லதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், கான்வே, ஜகோப் டுஃபி, லாகி ஃபெர்குசன், மேட் ஹென்றி, பிளைர் டிக்னர், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com