சஞ்சு சாம்சன் அடித்த ஷாட்: கவாஸ்கர் அதிருப்தி

தவறான ஷாட் காரணமாக இன்னொருமுறை குறைவான ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் என...
சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)

தவறான ஷாட் காரணமாக இன்னொருமுறை குறைவான ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் என சஞ்சு சாம்சன் பற்றி கூறியுள்ளார் முன்னாள் வீரர் கவாஸ்கர்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றது இந்திய அணி. 

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்களே எட்டியது. இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிவம் மாவி, 4 ஓவா்களில் 22 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தாா். இந்திய இன்னிங்ஸின் கடைசிக்கட்டத்தில் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த தீபக் ஹூடா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அவருடைய ஆட்டம் பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

பேட்டின் முனையில் பந்து பட்டு, ஷார்ட் தேர்ட் மேன் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார் சஞ்சு சாம்சன். அவர் ஓர் அருமையான பேட்டர். நிறைய திறமைகள் கொண்டவர். ஆனால் அவருடைய ஷாட் தேர்வு தான் சிலசமயங்களில் ஏமாற்றி விடுகிறது. அதுபோன்ற ஓர் ஆட்டம் தான் இது என்றார் கவாஸ்கர். சஞ்சு சாம்சனுக்கு நிறைய திறமைகள் உள்ளதாக நாம் பேசுகிறோம். தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com