தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா பங்கேற்றுள்ளார்.
காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணி தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாட முடிவெடுத்தார் ஜடேஜா. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும் ஜடேஜா விளையாடவில்லை.
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்த ஜடேஜா, வணக்கம் சென்னை என ட்விட்டரில் பதிவு எழுதினார். 26 புள்ளிகளைக் கொண்டுள்ள செளராஷ்டிர அணி, அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு அணிக்கு எதிராகத் தோற்றாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது.
இந்நிலையில் தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார். இந்தப் பருவத்தில் சிறப்பாக விளையாடி வரும் பிரதோஷ் ரஞ்சன் பால் தமிழ்நாடு அணியின் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த ஆட்டத்தில் கேப்டனாகச் செயல்பட்ட சாய் கிஷோர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


