டெஸ்டில் 1000 பவுண்டரிகள் அடித்து ஸ்மித் சாதனை!

டெஸ்டில் 1000 பவுண்டரிகள் அடித்து ஸ்மித் சாதனை!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
Published on

96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9085 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.  

தற்போது 2வது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3வது நாள் முடிவில் ஆஸி. 130/2 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக போட்டி விளையாடாமல் நின்றது.

999 பவுண்டரிகளுடன் இருந்த ஸ்மித்  பிரபல் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விசிய பந்தில் 1000ஆவது பவுண்டரியை அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் 50 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் எடுத்த பட்டியலில் இந்திய வீரர் சச்சின் (2058 ) முதலிடத்தில் உள்ளார்.

3வது நாள் முடிவில் ஸ்மித் 6 ரன்களுடனும் கவாஜா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com