23 வயதில் 236 விக்கெட்டுகள்: ஷாஹீன் ஷா அப்ரிடி அசத்தல்!
By DIN | Published On : 16th July 2023 04:29 PM | Last Updated : 16th July 2023 04:29 PM | அ+அ அ- |

பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 23 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் 236 விக்கெட்டினை எடுத்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது.
இதையும் படிக்க: ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகள் விளையாடியுள்ளேன்; ஆனால்... : வேதனையை பகிர்ந்த சஹால்!
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். 52 ஓவர் முடிவில் 203/5 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க: துலீப் கோப்பை: தென் மண்டல அணி 14வது முறையாக சாம்பியன்!
இதன் மூலம் டெஸ்டில் 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ஷாஹீன் ஷா அப்ரிடி. டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச கிரிக்கெட்டில் 236 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அப்ரிடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...