தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜஸ்ப்ரீத் பும்ரா பயிற்சி செய்யும் விடியோ: எப்போது இந்திய அணியில் விளையாடுவார்?

இந்தியாவின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பயிற்சி செய்யும் விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

படம்: இன்ஸ்டாகிராம் | பும்ரா

Published On :

29 வயதான வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் 319 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். செப்.2022 முதல் முதல் காயம் காரணமாக எந்தவொரு தொடரிலும் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளிலும் அவர் இல்லாதது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 

அவருக்கு சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போதுவரை பும்ரா பெங்களூரிலுள்ள என்சிஏ எனப்படும் தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சி செய்து வருகிறார்.

அக்டோபரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பும்ரா தயாராகுவாரென மருத்துவக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. அயர்லாந்து உடனான டி20 தொடரிலும் விளையாடுவாரென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் விடியோவினை பகிர்ந்துள்ளார். இந்த விடியோவினை இந்திய கிரிக்கெட் அணிக்கும் டேக் செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பும்ராவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.