இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
By DIN | Published On : 25th July 2023 04:12 PM | Last Updated : 25th July 2023 08:06 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3வது போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதையும் படிக்க: அமெரிக்காவிலும் அசத்தும் சூப்பர் கிங்ஸ்!
இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்டம்பினை பேட்டால் அடித்தும் நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டும் சென்றார். பின்னர் போட்டி முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்தார்.
IND-W captain Harmanpreet hit the stumps, shouts at the umpire then showed middle finger & thumb to the fans after given LBW by the umpire, claiming it was bat.
— Saqlain (@SaqlainHameeed) July 22, 2023
She Also Complaint about Umpiring In Press Conference #HarmanpreetKaur #INDWvsBANW pic.twitter.com/4HY8nWff8x
இதையும் படிக்க: மொராக்கோவை கோல்களால் மூழ்கடித்த ஜொ்மனி
ஹர்மன்ப்ரீத் கௌர் செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தன. அந்த விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் ஐசிசி விதிகளை மீறியதால் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் இரண்டு ஆசியப் போட்டிகளில் விளையாட தடை என்பதை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டி இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஹர்மன்ப்ரீத் விளையாடமாட்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஸ்டம்பினை உடைப்பது லெவல் 2 விதி மீறலில் வரும். இதற்கு முன்பாக வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசன் 2021இல் செய்ததால் 3 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. மேலும் அபராதத் தொகையும் செலுத்தினார். தற்போது இது உறுதியானதால் முதன்முதலாக மகளிர் வீராங்கனை ஒருவர் இப்படியான விதி மீறலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவராக ஹர்மன்ப்ரீத் கௌர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...