எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
மேலும் அமெரிக்காவினை சேர்ந்த 3 அணிகளுமாக மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. டிஎஸ்கே அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்படுகிறார். சிஎஸ்கே அணியில் பௌலிங் பயிற்சியாளர் ப்ராவோ இதில் பிளேயிங் லெவனில் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: க்ளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு!
எஸ்எஃப்யூ அணி முதலில் பேட்டிங் செய்து 171 /8 ரன்கள் எடுத்தது. அதிகப்ட்சமாக வேட் 49(30)ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய டிஎஸ்கே 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிலிந் குமார் 52(42) ரன்களும் டேனியல் சாம்ஸ் 42(18)ரன்களும் எடுத்து அசத்தினர்.
பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்திய டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலமாக 6 புள்ளிகளுடன் டிஎஸ்கே அணி ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ப்ளே-ஆஃப் சென்ற அணியாக சிஎஸ்கே அணியே உள்ளது. அதே தரமான அணியாக டிஎஸ்கே அணியும் உருவாகியுள்ளதால் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஜேஎஸ்கே அணியும் ப்ளே-ஆஃப் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


