பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயம்: 2-ம் இடம்பிடித்து அசத்திய அஜித் குமார் அணி!

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

Published On :

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

நடிகரும் ரேஸருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேஸிங் அணி மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட்ஆண்ட் ரேஸிங் அணிகளின் கூட்டணியில், அஜித்தின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

இந்த நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக தூரம் காரை இயக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமாரின் ரேஸிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல, பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5-வது இடம்பெற்றுள்ளது.

மேலும், கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அஜித் தேசியக் கொடியை ஏந்தி GT3 Pro-Am பிரிவில் 2-ம் இடம்பிடித்ததன் வெற்றியைக் கொண்டாடினார்.

அஜித் குமார் ரேஸிங் அணி கார் பந்தயங்களில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் மற்றும் ஸ்பெயினின் சர்க்யூட் டி பார்சிலோனா - கேடலூனியா உள்ளிட்ட 24 மணி நேர கார் பந்தயத் தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.

சில நாள்களுக்கு முன், லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த பந்தயத்தில் அஜித் 38-வது இடத்தை பிடித்த நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் அதனை விமர்சித்தனர்.

அதற்கு பதிலடி தரும் விதமாக, இந்த கார் பந்தயத்தில் 2-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

Summary

The Ajith Kumar Racing team put up an impressive performance, securing second place in the 24-hour car race held in Barcelona.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.