
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 243 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9825 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும் 48 அரை சதங்களும் அடங்கும். 900 பவுண்டரிகள் 275 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா விரைவில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் ரோஹித்துக்கு 175 ரன்களே தேவைப்படுகிறது. மேலும் தொடக்க வீரராக மட்டுமே 156 போட்டிகளில் 7807 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்க வீரராக 8000 ரன்கள் அடிக்க இன்னும் 193 ரன்கள் தேவைப்படுகிறது. தொடக்க வீரராக 8000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 10வது இடத்தில் உள்ளார். 9வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா (8083) இருக்கிறார். இந்தப் படியலில் 15,310 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.
இதையும் படிக்க: அமெரிக்காவிலும் அசத்தும் சூப்பர் கிங்ஸ்!
அடுத்து மே.இத்.தீவுகளுடன் ஒருநாள் போட்டிகள் வரவிருக்கின்றன. மேலும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளும் இருப்பதால் ரோஹித் சர்மா இந்தச் சாதனைகளை எளிதில் நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை?
ஆரம்பத்தில் ரோஹித் சர்மா 6வது, 7வது வீரராகவே களமிறங்கி வந்தார். முன்னாள் இந்திய கேப்டன் தோனிதான் ரோஹித்தை 2013இல் இங்கிலாந்திற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கினார். அதற்காக தோனி அப்போது மூத்த வீரர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ரோஹித் சர்மா தொடக்க வீரராக அந்தப் போட்டியில் 83 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, தோனியின் முடிவு எவ்வளவு சரியாக இருக்கிறதென கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.