ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!
By DIN | Published On : 30th July 2023 10:32 AM | Last Updated : 30th July 2023 10:32 AM | அ+அ அ- |

ஸ்டூவர்ட் பிராட் என்றதும் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்துதான் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த மோசமான நிகழ்விற்கு பின்னர் பிராட் தன்னை சிறந்த டெஸ்ட் பௌலராக நிலை நிறுத்தியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட்டெஸ்டில் 602 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட் ஆகும். முதலிடத்தில் ஆண்டர்சன் (690) இருக்கிறார்.
இதையும் படிக்க: மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எமனாக வந்த மும்பை இந்தியன்ஸ்!
சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வரிசையில் பிராட் 5வது இடத்தில் உள்ளார். முதலிடம் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள். வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடம்.
இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் தீர்ப்புக்கு அஸ்வின் ஆதரவு!
ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அசத்திவரும் பிராட் டேவிட் வார்னரை மட்டும் இதுவரை 17 முறை ஆட்டமிழக்க செய்து வார்னருக்கு எதிராக சிறப்பான சாதனையயும் நிகழ்த்தியுள்ளார்.
37 வயதான பிராட் இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெருவதாக நேற்றிரவு அறிவித்தார். இவரை விடவும் வயதான ஆண்டர்சன் (41) விளையாடிக் கொண்டிருக்கும்போது பிராட்டின் இந்த முடிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...