இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!
By DIN | Published On : 04th June 2023 03:01 PM | Last Updated : 04th June 2023 03:01 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக தொடக்கத்தைத் தந்தது. பதும் நிசங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், குஷல் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்னே மற்றும் குஷல் மெண்டிஸ் அரைசதம் கடந்தனர். கருணாரத்னே 52 ரன்களிலும், குஷல் மெண்டிஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சதீரா (44 ரன்கள்), அசலங்கா (6 ரன்கள்), தாசுன் ஷானகா (23 ரன்கள்) மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ( 29 ரன்கள்) குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரீத் அகமது மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்
50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...