2 வருட கடின உழைப்புதான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது: ரஹானே குறித்து டிராவிட்! 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரஹானே குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 
2 வருட கடின உழைப்புதான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது: ரஹானே குறித்து டிராவிட்! 

காயம் மற்றும் அறுவைச் சிகிச்சை காரணமாக ஷ்ரேயஸ் ஐயா் போட்டிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவரது இடத்துக்கு அஜிங்க்ய ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடிய ரஹானே, தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்திருக்கிறாா். இடையே தகுந்த ஃபாா்மில் இல்லாமல் தடுமாறிய ரஹானே, பிசிசிஐ ஆண்டு ஊதிய ஒப்பந்த முறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸுக்காக விளையாடி தனது பழைய ஃபாா்மை மீட்டெடுத்து அதிரடி காட்டினார்.  இதனை தொடர்ந்து இந்திய அணிக்குத் தோ்வாகியிருக்கிறாா். 

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: 

டபிள்யுடிசி போட்டிக்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ரஹானேவின் 2வருட கடின உழைப்புதான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது. பல வெற்றி தோல்விகளுக்குப் பிறகு அவர் இந்த இடத்தினை அடைந்துள்ளார். டாப் 2 அணிகளும் மோதுவதால் இந்த் ஆட்டம் சிறப்பானதாக இருக்கும். 

ரஹானே சிறந்த ஸ்லீப் பீல்டர். இந்தியா பலப்போட்டிகளில் வெற்றி பெற அவர் உதவியுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் அதிகமாக விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் நன்றாகவே விளையாடியுள்ளார். மேலும் அவர் அதிகம் அனுபவம் உள்ள பேட்டர். அவரைப் போல ஒருத்தர் அணியில் இருப்பது நல்ல விஷயம். ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை. நன்றாக விளையாடினால் அவர் நிச்சயம் அணியில் தொடர்ந்து நீடிப்பார். காயத்தில் இருந்து வருபவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது தெரியாது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com