இங்கிலாந்து வீரர் ராபின்சனை விமர்சிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள்: காரணம் என்ன? 

இங்கிலாந்து வீரர் ராபின்சன் முதல் ஆஷஸ் போட்டியில் நடந்துக்கொண்ட விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கவாஜா விக்கெட் எடுத்துவிட்டு ராபின்சன் ஆபாச வார்த்தைகளை பேசியது சர்சையானது. 

பின்னர் போட்டி முடிந்தப் பிறகு ராபின்சன், “இது மாதிரி ஆஸ்திரேலிய வீரர்களும் முன்னமே நடந்துள்ளனர். ரிக்கி பாண்டிங் செய்துள்ளார். ஆனால் நான் எனும்போது மட்டும் பெரிதாக்குகிறார்கள். மேலும் இது விளையாடும்போது ஒரு உணர்ச்சியில் நடந்துவிட்டது” எனக் கூறியிந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கும் இதற்கு விமர்சனம் செய்திருந்தார். 

ஏற்கனவே ராபின்சன் 2021இல் இனவெறி உணர்வுகளுடன் சர்ச்சைக்குரிய ட்வீட் செய்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இந்த செயல்கள் மூலமும் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து கவாஜா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என அலெக்ஸ் கேரி கூறியிருந்தார். இரண்டாவது ஆஷஸ் போட்டி வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரரரும் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது: 

தற்போது இங்கிலாந்தும் ராபின்சனும் இதற்கு எப்படி பதிலளிக்கப் போகிறார்கள் என்பது சுவாரசியமாக இருக்கும். இனிவரும் ஆஷஸ் போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் அது ராபின்சனுக்குதான் பிர்சனை. இந்த விஷயம் இன்னும் பல காலங்களுக்கு விழைவுகளை ஏற்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com