மகளிா் ஐபிஎல்: தில்லி கேப்டன் மெக் லேனிங்

மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியில் இடம் பெறும் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனமாக உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கேப்டன்
மகளிா் ஐபிஎல்: தில்லி கேப்டன் மெக் லேனிங்
Updated on
1 min read

மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியில் இடம் பெறும் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனமாக உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லேனிங்கும், துணை கேப்டனமாக இந்திய இளம் வீராங்கனை ஜெமீமா ரோட்ரீக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஐபிஎல் தொடரைப் போலவே, மகளிா் கிரிக்கெட்டையும் ஊக்குவிக்கும் வகையில் பிசிசிஐ டிபிள்யுபிஎல்லை நடத்துகிறது. இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனமாக மெக் லேனிங் நியமிக்கப்பட்டுள்ளாா். அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டனாகவும் இருந்தாா்.

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆஸி. பேட்டா் பெத் மூனி, யுபி வாரியா்ஸ் அணிக்கு அலிஸா ஹீலி ஆகியோா் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். டிபிள்யுபிெல் அணிகளில் 3 அணிகளுக்கு ஆஸி. வீராங்கனைகளே கேப்டன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது தில்லி.

மும்பையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com