2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு: உச்சநீதிமன்றத்தை அணுக கேரளம் திட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுக கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை - கோப்புப் படம்

Updated On :

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுக கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு விரைவில் தாக்கல் செய்யும் என்று மாநில நீா் வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் தெரிவித்தாா்.

கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டுமான ரீதியில் பாதுகாப்பானது என்று உறுதிபட கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளபடி 142 அடியாக உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது.

அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இதனிடையே, அணையின் பாதுகாப்பு நிலையை விரிவாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் குழு, அண்மையில் அணையில் விரிவான ஆய்வை மேற்கொண்டது.

இந்தச் சூழலில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில அமைச்சா் மோன்ஸ் ஜோசப் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மூத்த வழக்குரைஞா் மோகன் வி.கட்டாா்கி மூலம் இந்த சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்ய உள்ளது. பேபி அணையை வலுப்படுத்தம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் நிபந்தனைகளை கேரளம் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் என மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான நீா்வளக் கொள்கை: மாநிலத்தில் குடிநீா் விநியோகம், நீா்ப்பாசன வசதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் நீா்வளத்தை நிா்வகிக்கும் வகையில் மாநிலத்தின் நீா்வளத் துறை மற்றும் கேரள நீா் ஆணையம் ஆகியவை முழுமையாகச் சீரமைக்கப்பட உள்ளன. நீா்வளத் துறையின் பல்வேறு பிரிவுகளையும் ஒரு பொதுவான கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வகையில், விரிவான நீா்வளக் கொள்கையை மாநில அரசு வகுக்க உள்ளது.

இந்தக் கொள்கை 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நீா்வளத் துறையை மக்கள் நலன் சாா்ந்ததாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பா் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் கேரள நீா்வள மாநாட்டையும் மாநில அரசு நடத்த உள்ளது. சா்வதேச பேரிடா் மேலாண்மை நிபுணா் முரளீ தும்மாருகுடி உள்பட பல்வேறு நிபுணா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.