அரையிறுதிக்கு முன்னேற எங்களுக்கு 2 வெற்றிகள் தேவை: நியூசிலாந்து வீரர்!

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற நியூசிலாந்து மீதமுள்ள 2  போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிளிப்ஸ் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேற எங்களுக்கு 2  வெற்றிகள் தேவை: நியூசிலாந்து வீரர்!

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற மீதமுள்ள 2 போட்டிகளிலுன் வெற்றி பெற்றாக வேண்டும் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிளிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரை தனது தொடர்ச்சியான 4 வெற்றிகளால் அதிரடியாக தொடங்கிய நியூசிலாந்து அணி கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்றையப் போட்டியில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. இதனால் அந்த அணியின் ரன் ரேட் குறைந்து புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு சறுக்கியது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து 4 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற நியூசிலாந்து மீதமுள்ள 2  போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிளிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவைப்படுகின்றன. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நாங்கள் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருப்போம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. அதனால் நாங்கள் போட்டியில் கவனம் செலுத்தி எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்  என்றார். 

நியூசிலாந்து அணி நாளை மறுநாள் (நவம்பர் 4) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணியையும் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com