ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து ஷுப்மன் கில் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து ஷுப்மன் கில் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின்போது ஷுப்மன் கில் இந்த சாதனையைப் படைத்தார். அவர் வெறும் 38 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணியின் ஹாசிம் ஆம்லா இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அவர் 40 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

இன்றையப் போட்டியில்  7-வது ஓவரில் டிரெண்ட் போல்ட்டின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஷுப்மன் கில் இந்த சாதனையப் படைத்தார். இருப்பினும், அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்

ஷுப்மன் கில் - 38 போட்டிகளில் 
ஹாசிம் ஆம்லா - 40 போட்டிகளில்
ஜாகிர் அப்பாஸ் - 45 போட்டிகளில்
கெவின் பீட்டர்சன் - 45 போட்டிகளில்
பாபர் அசாம் - 45 போட்டிகளில் 
ராஸி வாண்டர் துசென் - 45 போட்டிகளில்

டெங்கு காய்ச்சல் காரணமாக நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஷுப்மன் கில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com