கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லை: இஃப்திகார் அகமது

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2023, 10:54 am

DIN

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானின் தோல்வி அந்த அணியின் ஹாட்ரிக் தோல்வியாகும்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் மற்றும் முகமது நவாஸ் உள்பட எங்களது அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களது சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. ஆனால், எங்களை முன்னேற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்வோம். அதைத்தான் தற்போது எங்களால் செய்ய முடியும். உண்மையில் இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள். பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பீல்டிங்கின் போது நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். நாங்கள் எங்களை மேலும் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.