பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை: ஆஸி. உலக சாதனை!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:13 am

DIN



டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார் வார்னர். ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து அசத்திய வார்னரின் வேகம் சதத்தில்தான் முடிந்தது.  வார்னர் 104  ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்மித், லபுஷேன் 71, 62 ரன்கள் முறையே எடுத்தனர். 

Story image

உலக சாதனை படைத்த மேக்ஸ்வெல்: 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார் மேக்ஸ்வெல். 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல். இதில் 9 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற பேட்டர்களான மிட்செல் மார்ஷ் - 9, கிரீன் - 8, கம்மின்ஸ்- 12, இங்கிலிஸ்- 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

Story image

ஆஸி. அணி 50 ஓவர் முடிவில் 399/8 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்தின் வான் பீக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 

400 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 21 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதிகபட்சமாக விகரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் ஆஸி. அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.