நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
By DIN | Published On : 28th October 2023 06:31 PM | Last Updated : 28th October 2023 07:09 PM | அ+அ அ- |

கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே 28 ரன்களுக்கும் வில் யங் 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி 77 பந்துகளில் சதமடித்தார். 89 பந்துகளில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை சமன்செய்த ரச்சின் ரவீந்திரா!
டேரில் மிட்செல் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த வந்த டாம் லாதம் (21) பிலிப்ஸ் (12), சான்ட்னர்(17) விரைவிலேயே ஆட்டமிழக்க ஜிம்மி நீஷம் நிலைத்து ஆடி அரைசதமடித்தார்.
இதையும் படிக்க: அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்: தென்னாப்பிரிக்க வீரர் புகழாரம்!
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையானபோது ஸ்டார்க் வைட் வீசி பவுண்டரி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. 5வது பந்தில் நீஷம் ரன்னவுட் (58 ரன்கள்) ஆனார். கடைசிப் பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. த்ரில் வெற்றி பெற்றது.
ஆஸி. சார்பாக ஜாம்பா 3 விக்கெட்டுகளும் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இதுதான் பழைய ஆஸி. அணி ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...