

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியவர் என்ற பெருமையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார் முகமது ஷமி.
முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு பலியாகும் பட்லர்
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஜோஸ் பட்லரின் விக்கெட்டை முகமது ஷமி 5 முறை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன்னதாக இத்தனை முறை ஜோஸ் பட்லரின் விக்கெட்டை எந்த ஒரு பந்துவீச்சாளரும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.