
ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நேபாளம் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, நேபாளம் முதலில் பேட்டிங் செய்து 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக் களமிறங்கினர். இந்த இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இந்த இணையை ஷர்துல் தாக்குர் பிரித்தார். குஷால் 38 ரன்களில் ஷர்துல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்களில் பிம் சார்கி (7 ரன்கள்), ரோஹித் பௌடல் (5 ரன்கள்), குஷால் மல்லா (2 ரன்கள்) தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், சிறப்பாக விளையாடிய ஆசிஃப் அரைசதம் எடுத்தார். அவர் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய குல்ஷன் ஜா ( 23 ரன்கள் ), திபேந்திர சிங் ( 29 ரன்கள்), சோம்பால் கமி (48 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நேபாளம் 48.2 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: நீரஜ் சோப்ராவை பாராட்டிய ஸ்விட்சர்லாந்து சுற்றுலாத் துறை!
இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். முகமது ஷமி, ஹார்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.