இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்: யாரிந்த துனித் வெல்லாலகே? 

ஆசியக் கோப்பையில் இந்திய அணியை  இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே திணறடித்து வருகிறார். 
படம்: ட்விட்டர் | ஐசிசி
படம்: ட்விட்டர் | ஐசிசி

இலங்கை, கொழும்புவில் பிறந்த துனித் வெல்லாலகே சிறந்த இடதுகை சுழல் பந்து வீச்சாளர். இலங்கை அணியில் 19 வயதிலேயே தகுதி பெற்றுள்ளார். 19வயதிற்கு குறைவானவர்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2022 யு-19இல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக துனித் வெல்லாலகே இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஜூன்14,2022இல் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஜூலை 24இல் டெஸ்டிலும் அறிமுகமானார். 

ஆசியக் கோப்பை அணியிலும் தேர்வான துனித் வெல்லாலகே சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான இன்றைய (செப்.12) போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களான கில், ரோஹித், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

தற்போது கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா விக்கெட்டினையும் எடுத்து அசத்தியுள்ளார். 10 ஒவருக்கு 5 விக்கெட்டுகள் 1 ஓவர் மெய்டன் செய்து  40 ரன்கள் கொடுத்துள்ளார். இந்திய  அணி 36 ஓவர் முடிவில் 172/6 ரன்கள் எடுத்துள்ளது. 

இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் திடீரென பிரபலமாகியுள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பதிரானா, தீக்‌ஷனா ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

துனித் வெல்லாலகே 2024 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றால் நிச்சயமாக அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டிப்போடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com