காசியில் கிரிக்கெட் மைதானம்: திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்கள்?
By DIN | Published On : 19th September 2023 09:31 PM | Last Updated : 19th September 2023 09:34 PM | அ+அ அ- |

உத்தரபிரதேசம் வாரணாசியில் ரூ. 450 கோடியில் நவீன வடிவமைப்புடன் 31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். பிசிசிஐ, யுபிசிஏ இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முக்கியமான நட்சத்திர கிரிக்கெட்டர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மண்டல மேலாளர் கௌசிக் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பார்வையாளர்களே இல்லாத பாகிஸ்தான்-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
Narendra Modi to lay the foundation of the cricket stadium at Kashi on September 23rd. pic.twitter.com/1yf3CknRMD
— Johns. (@CricCrazyJohns) September 19, 2023
இதையும் படிக்க: 21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அஸ்வின்: ரோஹித் கூறிய காரணம்?
பிரபல எல்&டி நிறுவனம் இந்த ஸ்டேடியத்தை உருவாக்க உள்ளது. யுபிசிஏ மற்றும் காற்று, நீர் மாசுபாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டு பணிகள் நடைபெற உள்ளன. ரூ.120 கோடி நிலத்திற்காகவும் ரூ.330 கோடி மைதானம் கட்டமைக்கவும் செலவிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு!
கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப் பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் மாதிரி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2024இல் இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G