ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

6வது சுற்றிலும் இந்திய வீரர் குகேஷ் முன்னிலை!

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றின் முடிவில் இந்தியாவின் குகேஷ், ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் மீண்டும் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா்.

News image
குகேஷ், ஹிகரு நகமுரா- PTI
Updated On :11 ஏப்ரல் 2024, 7:36 am

DIN

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றின் முடிவில் இந்தியாவின் குகேஷ், ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் மீண்டும் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா். ஏற்கனவே 5ஆவது சுற்று முடிவிலும் இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை நடைபெற்ற 6வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவுடன் டிரா செய்தார். மற்றுமொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா நிஜத் அபாசோவவை தோற்கடித்தார்.

மொத்தம் உள்ள 14 சுற்றுகளில் 6 சுற்றுகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளன.

6ஆவது சுற்று முடிவு: (ஓபன் பிரிவு)

இயன் நெபோம்னியச்சி, குகேஷ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர். கரானா (3), பிரக்ஞானந்தா இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர். ஹிகரு நகமுரா, விதித் சந்தோஷ் 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர்.

மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான வைஷாலி, கொனேரு முறையே 2.5, 2 புள்ளிகளுடன் 5வது, 7வது இடங்களை பிடித்துள்ளனர். டான் 4.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.