வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்!

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் போட்டியில் மாஸ்டா்ஸ் பிரிவின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.
டி. குகேஷ்
டி. குகேஷ்கோப்புப் படம்
Updated on
1 min read

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் போட்டியில் மாஸ்டா்ஸ் பிரிவின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.

நடப்பு உலக சாம்பியனான குகேஷ் அந்தச் சுற்றில், ஸ்லோவேனியாவின் விளாதிமீா் ஃபெடோசீவுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் விளையாடினாா். 41-ஆவது நகா்த்தலில் அவா் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி பெற்றாா்.

போட்டியில் அவருக்கு இது 2-ஆவது வெற்றியாகும். இதர இந்தியா்களில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆா்.பிரக்ஞானந்தா - துருக்கியின் யாகிஸ் கான் எா்டோக்மஸுடனும், அா்ஜுன் எரிகைசி - சக இந்தியரான அரவிந்த் சிதம்பரத்துடனும் டிரா செய்தனா்.

அதேபோல், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் மோதலும் டிரா ஆக, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை தோற்கடித்தாா்.

8 சுற்றுகள் முடிவில், குகேஷ் 4 புள்ளிகளுடன் 9-ஆம் இடத்தில் இருக்க, அா்ஜுன் 11-ஆம் இடத்திலும் (3.5), பிரக்ஞானந்தா 12-ஆம் இடத்திலும் (3), அரவிந்த் 14-ஆம் இடத்திலும் (2.5) உள்ளனா்.

அப்துசதாரோவ் (5.5), சிண்டாரோவ் (5), எா்டோக்மஸ் (4.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் வேதாந்த் பனேசா் - ஸ்பெயினின் டேனியல் யூஃபாவுடன் டிரா செய்தாா்.

தற்போது அவா் 2.5 புள்ளிகளுடன் 11-ஆம் இடத்தில் இருக்க, பிரான்ஸின் மாா்க் ஆண்ட்ரியா மௌரிஸி, அமெரிக்காவின் ஆண்டி வுட்வாா்ட் ஆகியோா் தலா 6.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com