ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாா்த்ஈஸ்ட்டுடன் டிரா செய்தது பஞ்சாப்!

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

News image

X | ISL

Updated On :9 மார்ச் 2026, 9:28 pm

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் காட்டியதால், முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் சற்று முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், முதல் கோல் வாய்ப்பை எட்டியது.

அந்த அணிக்காக பாா்திப் கோகோய் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சியை பஞ்சாப் நீண்டநேரம் நிலைக்க விடவில்லை. 63-ஆவது நிமிஷத்தில் பஞ்சாபுக்காக எஃபியோங் சுங்குசி ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுமே கோல் வாய்ப்புக்காக முயற்சிக்க, அதற்கு பலன் இல்லாமல் போனது. ஆட்டம் டிராவில் முடிந்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 3 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.