டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை: இஷான் கிஷன்

டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷன் (கோப்புப்படம்)
இஷான் கிஷன் (கோப்புப்படம்)

டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ள நிலையில், இஷான் கிஷன் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இஷான் கிஷன் (கோப்புப்படம்)
2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதென்பது எனது கைகளில் இல்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. அணியில் இடம்பெறாமலிருந்தபோது நான் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். கிரிக்கெட்டில் நீங்கள் சிறிது காலம் ஓய்வு எடுத்தால், உங்களைப் பற்றிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துவிடும். அணியில் இடம்பெறாதபோது வீரர்கள் அந்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நேர்மறையான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றார்.

இஷான் கிஷன் (கோப்புப்படம்)
ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார் பும்ரா; முன்னாள் இந்திய வீரர் புகழாரம்!

அண்மையில் பிசிசிஐ அறிவித்த மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com