டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
சுனில் நரைன்
சுனில் நரைன் படம் | ஐபிஎல்

டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே கலக்கி வருகிறார். அண்மையில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுனில் நரைன் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

சுனில் நரைன்
பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நான் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து பலரும் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நீங்கள் விளையாட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைக்கின்றனர். எனது ஓய்வு முடிவினை அமைதியாக யோசித்துதான் எடுத்தேன்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மீண்டும் விளையாடுதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்தி அணிக்கு எனது ஆதரவை அளிப்பேன். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு உலகக் கோப்பையை வெல்லும் திறன் உள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சுனில் நரைன்
ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சஹால் சாதனை!

35 வயதாகும் சுனில் நரைன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com