கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கேரி கிறிஸ்டன் அந்த அணிக்கு ஐசிசி கோப்பையை வென்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.
கேரி கிறிஸ்டன்
கேரி கிறிஸ்டன் படம் | கேரி கிறிஸ்டன் (எக்ஸ்)

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கேரி கிறிஸ்டன் அந்த அணிக்கு ஐசிசி கோப்பையை வென்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனையும், டெஸ்ட் போட்டிக்கான தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அண்மையில் நியமித்தது.

கேரி கிறிஸ்டன்
ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கேரி கிறிஸ்டன், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். தற்போது இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்துடன் பாகிஸ்தான் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு வென்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படி இல்லையென்றாலும், அவரது தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி அல்லது 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்
பாகிஸ்தான் அணி வீரர்கள் படம் | ஐசிசி

ஐசிசி கோப்பைகளை வெல்வது குறித்து கேரி கிறிஸ்டன் பேசியதாவது: எனது பதவிக்காலத்தில் நடைபெறவுள்ள ஐசிசியின் மூன்று முக்கியமான தொடர்களில் ஓன்றில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றாலும், அது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும் அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றாலும் அது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. பாகிஸ்தான் அணி அதன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவி செய்வதே எனது வேலை. பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடுவதை உறுதி செய்தாலே கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் நன்றாக இருக்கும்.

கேரி கிறிஸ்டன்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

உங்களால் கோப்பையை வென்றுத் தர முடியும் என உத்தரவாதம் தர முடியாது. ஆனால், கோப்பையை வெல்ல அணியை சிறப்பாக தயார் செய்தவற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்பதை உறுதியாக கூறலாம். அதனையே நான் செய்ய உள்ளேன். கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைத் தொடர்களில் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதனால், கோப்பையை வெல்வதற்கு அவர்கள் கூடுதலாக ஒரு அடி எடுத்து வைத்தால் போதுமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com