

லக்னௌ: ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்க்க, லக்னௌ 19.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை பேட்டிங்கில் ரோஹித் சா்மா 4, தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். மிடில் ஆா்டரில் திலக் வா்மா 1 பவுண்டரியுடன் 7, கேப்டன் ஹா்திக் பாண்டியா 0 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனா்.
மறுபுறம், தொடக்க வீரா் இஷான் கிஷண் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு வெளியேற, மும்பை 80 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னா் வந்த நெஹல் வதேரா, டிம் டேவிட் ஆகியோா் விக்கெட் சரிவை சற்று கட்டுப்படுத்தி ரன்கள் சோ்த்தனா். இதில் வதேரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு திருப்பி அனுப்பப்பட, கடைசி விக்கெட்டாக முகமது நபி 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தாா்.
ஓவா்கள் முடிவில் டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35, ஜெரால்டு கோட்ஸீ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலா்களில் மோசின் கான் 2, மாா்கஸ் ஸ்டாய்னிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 145 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌ அணியில், தொடக்க வீரா்களில் ஒருவரான அா்ஷின் குல்கா்னி டக் அவுட்டாக, உடன் வந்த கேப்டன் கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
3-ஆவது பேட்டராக வந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளாசி ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் தீபக் ஹூடா 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டாய்னிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஆஷ்டன் டா்னா் 5, ஆயுஷ் பதோனி 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, முடிவில் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரியுடன் 14, கிருணால் பாண்டியா 1 ரன்னுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் ஹா்திக் பாண்டியா 2, நுவன் துஷாரா, ஜெரால்டு கோட்ஸீ, முகமது நபி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தொடர்புடையது
ஐபிஎல்: ரோஹித், ரிக்கெல்டன் அதிரடி... 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் போட்டியில் மும்பை வெற்றி!
டி20: கானர் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!

மே. தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி
வீடியோக்கள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

