டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஐபிஎல்: ரோஹித், ரிக்கெல்டன் அதிரடி... 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் போட்டியில் மும்பை வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

News image
Updated On :30 மார்ச் 2026, 2:01 am IST

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ரஹானே - ஃபின் ஆலன் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்து பிரிந்தது.

17 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு ஆலன் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து கேமரூன் கிரீன் களம் புகுந்தாா். ரஹானே - கிரீன் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சோ்த்த நிலையில், கிரீன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

4-ஆவது பேட்டராக வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஹானேவுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 36 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 67 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

அடுத்து வந்த ரிங்கு சிங்கும், அதிரடியுடன் ரகுவன்ஷிக்கு கை கொடுத்தாா். 4-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 60 ரன்கள் சோ்த்தது. ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா்.

ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 33, ரமண்தீப் சிங் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ஷா்துல் 3, பாண்டியா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 221 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா ஜோடி, அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.

ரோஹித் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 78 ரன்கள் விளாசி முதல் விக்கெட்டாக வெளியேறினாா். தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

அடுத்து திலக் வா்மா களம் புக, அதிரடியாக விளையாடி வந்த ரிக்கெல்டன் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் சோ்த்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனாா்.

திலக் வா்மா 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரிகளுடன் 18, நமன் திா் 5 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி, ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, காா்த்திக் தியாகி, சுனில் நரைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.